என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆதார் இணைப்பு"
- வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
- வருகிற 30-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும்
நெமிலி:
காவேரிப்பாக்கம் வட்டார விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.இதுகுறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் கூறியதாவது:-
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்த அனைத்து வேளாண் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2ஆயிரம் என ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தொடர்ந்து பயனடைய இ.கே.ஒய்.சி. மற்றும் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை வருகிற 30-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஊக்கத்தொகை வருவது நிறுத்தப்படும்.
எனவே விவசாயிகள் அருகில் உள்ள வங்கி, இ சேவை மையங்கள் மற்றும் தபால் நிலையங்களை அணுகி ஆதார் எண்ணை உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
- சிறப்பு முகாம்களை பயன்படுத்திகொள்ள அறிவுரை
வேலூர்:
வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நா.ராஜகோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் 14-வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 11,543 விவசாயிகளும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிகணக்கு இல்லாமல் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல்து றையின் கீழ்செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி துவங்க வேண்டும் எனவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது.
தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் கருவியின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும்.
இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அல்லது அஞ்ச லகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.
- கட்டடத்தில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் ஆதார் விவரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும்.
- மின் களப்பணியாளர், வீடு வீடாக சென்று மீண்டும் ஆதார் இணைக்க அறிவுறுத்தி வருகின்றனர்.
தாராபுரம்:
தமிழக மின்சார வாரியம், மானியம் பெறும் இணைப்புகளை வரன்முறைப்படுத்தும் நோக்கில், மின்நுகர்வோரின் ஆதார் விவரம் இணைக்க திட்டமிட்டது. அதன்படி கடந்த சில மாதங்களாக ஆதார் இணைப்பு பணி ஆன்லைன் வாயிலாக நடந்தது. உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
திருப்பூர் மாவட்டத்தில் ஆதார் இணைப்பு பணி மந்தமாக நடந்தது. அரசு அளித்த அவகாசத்துக்குள் ஆதார் இணைப்பு பணி 80 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்தது. இருப்பினும் ஒரே உரிமையாளர், ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.
கட்டடத்தில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் ஆதார் விவரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும். மாறாக உரிமையாளர் ஆதார், அனைத்து இணைப்புகளிலும் இணைக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளில், ஒரே குடும்ப உறுப்பினரின் ஆதார் இணைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. வீடு வீடாக சென்று வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் விவரம் இணைக்க அறிவுறுத்தப்பட்டது.அதற்கு பிறகும் இரட்டைப்பதிவு போன்ற ஒரே ஆதார் பதிவு விவரங்களை சேகரித்து மீண்டும் தற்போது பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. மின் களப்பணியாளர், வீடு வீடாக சென்று மீண்டும் ஆதார் இணைக்க அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், மின்வாரியத்தில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும் வாரிய அறிவிப்பை ஏற்று அனைவரும் ஆதார் இணைத்தனர். ஒரே உரிமையாளரின் பல கட்டடங்களுக்கு ஆதார் இணைப்பதில் சிக்கல் இருக்கிறது. வாடகை வீட்டில் குடியிருப்பவரின் ஆதார் இணைக்கப்பட வேண்டும். அதற்காக மீண்டும் வீடு வீடாக கள ஆய்வு நடத்தி வருகிறோம். எதிர்காலத்தில் மின் கட்டணம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்நுகர்வோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.
- சுமார்7 லட்சம் பேர் இன்னும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கவில்லை.
- இன்றுடன் நிறைவடையவிருந்த அவகாசம் வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
சென்னை:
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற மின் நுகர்வோரின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை மின் வாரியம் காலக்கெடுவை நீட்டித்தது. அதன்பிறகு, பிப்ரவரி 15-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது.
நேற்று மாலை வரை 2.59 கோடி மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். சுமார்7 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை. இந்தநிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 2.80 கோடி பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காமல் இன்னும் 7 லட்சம் பேர் உள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 7 லட்சம் பேர் இணைக்க வேண்டி இருப்பதால் இன்றுடன் நிறைவடையவிருந்த அவகாசம் வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்கு பின் அவகாசம் வழங்கப்படமாட்டாது. தொழில்நுட்பம் கோளாறு போன்ற பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் சொல்வதெல்லாம் வேதவாக்கு அல்ல. தோல்வியின் விளிம்பில் உள்ள அதிமுகவினர் விரக்தியில் பேசிக் கொண்டு இருக்கின்றனர் என்றார்.
- மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது.
- ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
சென்னை:
மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. தமிழகத்தில் உள்ள 2.67 கோடி மின் நுகர் வோர்களின் ஆதாரை இணைக்கும் பணி நவம்பர் 15-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் பொது மக்கள் இணைப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.
பின்னர் துறை சார்பாக விளக்கப்பட்டதை தொடர்ந்து ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். டிசம்பர் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.
இதற்காக 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து கால அவகாசம் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
பிரிவு அலுவலகங்களில் மட்டுமின்றி ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.
நேற்று வரை 2 கோடியே 11 லட்சம் பேரின் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.
ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மின் வாரியம் வழங்கிய அவகாசம் முடிய 4 நாட்கள் மட்டுமே உள்ளது. இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது.
அதனால் மேலும் அவகாசம் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகரிகள் கூறியதாவது:-
ஆதார் இணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் சிலர் இணைக்காமல் இருப்பதால் மேலும் சில நாட்கள் அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பை அமைச்சர் 30-ந் தேதி வெளியிடுகிறார். மின் இணைப்புடன் ஆதார் இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாது என்று யாரும் கூறவில்லை. மின் கட்டணம் செலுத்தும்போது அவர்களின் ஆதார் எண் கேட்டு பதிவு செய்யப்படும்.
எனவே இணைக்காத மின் நுகர்வோர்கள் விரைவில் இணைத்து மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தமிழகம் முழுவதும் ஆதார் எண் இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
- தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் ஆதார் எண் இணைப்பு பணி முடிவடைந்துள்ளது.
தேனி:
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் ஆதார் எண் இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இதில் தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் ஆதார் எண் இணைப்பு பணி முடிவடைந்துள்ளது.
இதையடுத்து, 100 சதவீதம் ஆதார் எண் இணைத்ததில், தேனி பகிர்மான வட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
- மின் கட்டண இணைப்புடன் ஆதார் எண் இணைத்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது.
- படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்துவிட்டனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் முதல் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
மின் வாரிய அலுவலகங்களிலும் ஆதார் நம்பரை இணைத்து கொடுக்கிறார்கள். இதனால் ஒவ்வொருவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைத்து வருகிறார்கள்.
படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்துவிட்டனர். மற்ற பொதுமக்கள்தான் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.
மொத்தம் உள்ள 2.33 கோடி வீடு மின் இணைப்புகளில் இதுவரை 2811 பிரிவு அலுவலக சிறப்பு முகாம்கள் மூலம் 1 கோடியே 52 லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர். ஆன்லைன் மூலம் 17 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இது தவிர மின்வாரிய அலுவலகங்கள் மூலம், இணைத்தவர்களையும் சேர்த்து நேற்றுவரை மொத்தம் 2.9 லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளதாக மின் சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆதாரை இணைப்பதற்கு ஜனவரி 31-ந் தேதி வரை காலக்கெடு உள்ளது. எனவே ஆதாரை இணைக்காத மின் நுகர்வோர் உடனடியாக மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருப்பூர் :
வாக்காளர் பட்டியலை ஒழுங்குபடுத்தும்வகையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு நடைபெற்று வருகிறது. திருப்பூரில் உள்ள 8சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த அக்டோபர் மாத துவக்கத்தில் மாவட்ட மொத்த வாக்காளர்களில் 39.95 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் இணைத்திருந்தனர். ஆதார் இணைப்பில் திருப்பூர் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் துவங்கியபின், ஆதார் இணைப்பு சற்று வேகமெடுத்துள்ளது.
வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு குறித்து மக்கள் மத்தியில் சுய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வாக்காளர் சிறப்பு முகாம்கள், ஆன்லைன் மூலம் வாக்காளர்கள் ஆதார் இணைத்து வருகின்றனர். இதுவரை 11.50 லட்சம் வாக்காளர்கள் ஆதாரை இணைத்துள்ளனர். மாவட்ட ஆதார் இணைப்பு விகிதம் 49.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
திருப்பூர் வடக்கு தொகுதி ஆதார் இணைப்பில் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் 3 லட்சத்து 80 ஆயிரத்து 577 பேரில் 32.44 சதவீதம் பேர் அதாவது 1 லட்சத்து 23 ஆயிரத்து 464 வாக்காளர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர்.
திருப்பூர் தெற்கில் 43.47 சதவீதம், பல்லடத்தில் 44.17 சதவீதம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். ஆதார் இணைப்பில் மடத்துக்குளம் முன்னிலையில் உள்ளது.இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் 2 லட்சத்து 33 ஆயிரத்து 177 பேரில் 61.36 சதவீதம் பேர் அதாவது 1 லட்சத்து 43 ஆயிரத்து 76 பேர் ஆதார் இணைத்துள்ளனர்.
உடுமலையில் 58.69 சதவீதம் பேரும் அவிநாசியில் 57.57 சதவீதம், தாராபுரத்தில் 57.18 சதவீதம் பேர், காங்கயம் தொகுதியில் 55.16 சதவீதம் பேரும் ஆதார் இணைத்துள்ளனர்.தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதில் திருப்பூர் மாவட்டம் முன்னேறி வருகிறது.இருப்பினும் 50 சதவீத வாக்காளர்கள் இன்னும் இணைக்கவில்லை. அவர்களும் இணைத்தால் விரைவில் முதன்மை மாவட்டமாக மாறி விடும் என்றனர்
- மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது.
- தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் உள்ளது.
சென்னை:
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் முகாமை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்கும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். மொத்தம் உள்ள 2.33 கோடி நுகர்வோர்களில் இதுவரை 15 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.
ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்தாகிவிடும் என பலர் உண்மைக்கு மாறான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மின்துறையை மேம்படுத்தவே மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. நடைமுறையில் இருக்கும் அனைத்து இலவச மின்சார திட்டம், மானியம் தொடரும். வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படாது. ஒருவர் 5 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, 100 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, தற்போதுள்ள நடைமுறையே தொடரும். பல மின் இணைப்புகளை ஒரே ஆதாரில் இணைத்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.11 ஆயிரம் கோடி வட்டி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மின்சாரத்துறைய அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
- மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக தவறான தகவலை பரப்ப வேண்டாம்
கோவை:
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு சிக்கல் ஏற்படும் என தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. ஆதார் இணைப்பு தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மின் வாரியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆதார் எண் இணைப்பு என்பது முக்கியம். மின் கட்டண விவகாரத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மின்சாரத்துறைய அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளலாம். அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் அரசு மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆதார் எண் இல்லை என்றாலும் தற்போது கட்டணம் செலுத்தலாம். தவறான தகவலை பரப்ப வேண்டாம்.
ஆதார் எண் கொடுப்பது நல்லது. மின் இணைப்பு பெற்றவர்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். யார் பேரில் மின் இணைப்பு இருக்கிறதோ அந்த நபர் இறந்திருக்கும் பட்சத்தில் அதற்கான அவகாசங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன. தங்கள் மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடைபெற இருக்கின்றன. ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. கண்டிப்பாக 100 சதவீதம் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். மின்சார துறையை சீர்திருத்தம் செய்யும் போது ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின்சார வாரியத்தை புதிய பரிணாமத்தோடு மேம்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
- எனவே, அனைத்து வாக்காளர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று(1-ந் தேதி ) தொடங்கி வருகிற 31-ந் தேதி வரை நடைபெறும்.
ராமநாதபுரம் மாவ ட்டத்திற்குட்பட்ட 4 சட்ட மன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்கா ளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்தில் அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலமாக அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் களப்பணியின் போது, படிவம் 6டி-ஐ கொண்டுவரும் போது மேற்கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்தும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையம் ஆகியவைகளை அணுகியும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம். எனவே, அனைத்து வாக்காளர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வங்கிக்கணக்குகள், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான ரொக்க பரிமாற்றங்கள், செல்போன் இணைப்புகள், காப்பீடு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ஆக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால், ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத்தக்கதல்ல என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகளை தொடுத்திருந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி மாதம் முதல் விசாரித்து வந்தது.
ஒவ்வொரு முறை விசாரணையின் போதும் சில இடைக்கால உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்திருந்தனர். இந்நிலையில், இன்றுடன் வழக்கு விசாரணை நிறைவடைந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. #Aadhaar
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்